குழந்தைகளிடையே ஆஸ்துமா நோய் அதிகரிப்பு!

Date:

குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோய் அதிகரிப்பு குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,

நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“பாடசாலைகள் விளையாட்டுக் கூட்டங்களுக்குத் தயாராகும்போது, ​​​​சுட்டெரிக்கும் வானிலைக்கு மத்தியில் குழந்தைகள் பல வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவர்கள் ஆஸ்துமா தூண்டுதலால் பாதிக்கப்படுகின்றனர்,” என வைத்தியர் எச்சரித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புகைபிடிக்கும் பகுதிகளிலிருந்து குழந்தைகளை விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வைத்தியர் வலியுறுத்தியதுடன், புகைப்பிடிப்பது சுவாச சிக்கல்களை, குறிப்பாக ஆஸ்மா உள்ளவர்களுக்கு அதிகரிக்கிறது என்றார்.

“குழந்தை பருவ ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகளில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொடர்ந்து இருமல் ஆகியவை அடங்கும்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...