சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.இந்திரஜித் எழுதிய மாத்ய மக (ஊடக பாதை) சிங்கள மொழியிலான நூல் வெளியீட்டு விழா கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் 6ஆம் திகதி இடம்பெற்றது.
பிரதம அதிதியாக பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கலந்துகொண்டார்.
நூலின் முதற் பிரதியினை புரவலர் புத்தக பூங்கா ஹாசிம் ஒமர் நுலாசிரியர் எம்.இந்திரஜித்திடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
நூல் பற்றிய விமர்சனத்தை முன்னாள் ஊடக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன் சூரிய நிகழ்த்தினார். நூலின் ஏற்புரையினை எம்.இந்திரஜித் வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ,முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலாக,முன்னாள் பிரதி அமைச்சர் ,பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் முதுநபீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில் வாகனம் திலகராஜ், Ibc ,Lankasri நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தைய்யா , இந்திய ஊடகவியலாளர் அருண் கங்காதரன்,கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கலீலுர்ரஹ்மான், CTV மற்றும் நியூசிலாந்தினை தளமாக கொண்டு இயங்கும் அரசன் வானொலி தலைவர் கிஷோர் குமார்,ஆசியன் மீடியா கலாச்சார சங்கத்தின் தலைவர் உபுல் ஜனக ஜயசிங்க,சங்கத்தின் பொதுச் செயலாளர் பெதும் விக்ரமரத்ன, ‘நியூஸ்நவ்’ இணையத்தள பணிப்பாளர் மௌலவி முஜீப், அதன் செய்தி ஆசிரியர் பியாஸ் முஹம்மத், தினகரன் மற்றும் வாரமஞ்சரி பிரதம செய்தி ஆசிரியர்.டி.சென்தில் வேலவர்,Lanka Sri country Director மஹமாயி பாஸ்கர் ,பால சுரேஸ் ,சென்னையினை சேர்ந்த வர்த்தகர்களான திருநாவுக்கரசு,அண்ணாமலை மணிகன்டன்,கார்த்திக் விஸ்வநாதன்,SBS lanka Holding (PVT) Ltd.மட்டக்களப்பு பிராந்தியம் ஈ.பாஸ்கரன்,உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.