இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக இந்த வருடம் தேசிய தேர்தல்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையும். அதனை தொடர்ந்து மனுத்தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.