நபியவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான மாபெரும் கண்காட்சி கொழும்பில்

Date:

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான மாபெரும் கண்காட்சி எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 04ம் திகதி வரை காலை 9.00 மணி முதம் இரவு 8.00 மணி வரை கொழும்பு வெல்லம்பிட்டிய, நாஸ் கலாச்சார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கண்காட்சியினை நாஸ் கலாச்சார நிலையமும், தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இக்கண்காட்சியில் ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை, நபியவர்களின் பிறப்பு முதல் 40 வயது வரையான காலப்பகுதி, நபி (ஸல்) அவர்கள் மக்கள வாழ்வில் எதிர்கொண்ட துன்பங்களும் சவால்களும், நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்வும் வெற்றிகளும், நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிமிக்க குடும்ப வாழ்வும், அதன் முகாமைத்துவங்களும், நபி (ஸல்) அவர்களின் ஆளுமைமிக்க சகல வாழ்வியல் கலைகளும் தத்துவங்களும் எனும் தலைப்பிலான கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பார்வையிடுவதற்கு ஏற்றாற் போல் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களை 0770754218/ 777307945 எனும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...