நல்ல குடும்பங்கள் நல்ல பிரஜைகளை உருவாக்கும்; நல்ல பிரஜைகளால் நாடு வளம்பெறும்- ஸலாமாவின் இரண்டாவது பொதுக் கூட்டத்தில் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

Date:

நல்ல குடும்பங்கள் காணப்படும் அளவுக்கு நல்ல பிரஜைகள் தோற்றம் பெறுவர். நல்ல பிரஜைகள் காணப்படும் அளவுக்கு தேசம் வளம்பெறும். இதற்கு சிறந்த முன்னோடியாக நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பம் காணப்படுகின்றது என ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் தெரிவித்தார்.

கடந்த 17ம் திகதி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஸலாமா சொஸைட்டியின் 2வது பொதுக் கூட்டம் வியாங்கொட, நய்வல செனிரோ ட்ரீம் பெரடைஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இம்முறை இந்நிகழ்வு அங்கத்தவர் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 180 அங்கத்தவர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர்.

இப்பொதுக் கூட்டத்தின் தலைமை உரையையும், வரபேற்புரையையும் நிகழ்த்திய தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திப்பதில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றும் போது, குடும்ப வாழ்க்கை அன்பு, அரவணைப்பு, மற்றும் உயர்ந்த உணர்வுகளில் கட்டியெளுப்பப்பட்டது.

இவ்வாறான குடும்பங்களில் அமைதி மற்றும் நிம்மதி எப்போதும் காணப்படும். கணவன் மனைவி தொடர்பான உரிமைகள், கடமைகள் என்பன மேற்சொன்ன உறவுகளைப் பாதுகாக்கவே இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைத் தான் அல்குர்ஆன் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றது. ‘இன்னும் நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்  உங்களுக்கிடையே அன்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (ஸூரா அர்ரூம் 21)
குடும்பத்தில் ஆன்மீகப் பெறுமானங்கள் இழையோடிக் காணப்படும் போது அல்லாஹ்வின் அருள்களை அது கொண்டுவந்து சேர்க்கும் என்பது நபி (ஸல்) அவர்களின் நற்செய்தியாகும்.

இந்தப் பின்னணியில் குடும்பங்களுக்கு வழிகாட்டுவதை தனது பணியாக ஸலாமா முன்னெடுத்துள்ளது. எனவே ஸலாமா அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வழிகாட்ட ஸலாமா எப்போதும் தயாராக இருக்கும் எனக் குறிப்பிட்டதோடு இப்பணி எமது நாட்டில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் போய் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்வுகளில் இரண்டு பிரதான விரிவுரைகள் நடாத்தப்பட்டன. நெஸ்ட் அகடமியின் பணிப்பாளரும் நாடறிந்த சமூக சேவகருமான அல்ஹாஜ் எஸ். எல். எம். பௌஸ் அவர்கள் ‘குடும்பமாக முன்நோக்கிச் செல்லல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியதுடன் எழுத்தாளரும் கல்வியியலாளருமான ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள் ‘கணவன் – மனைவி உறவை வலுப்படுத்தல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதி அமர்வில் கடந்த கூட்ட அறிக்கையையும், ஸலாமா சொஸைட்டியின் செயற்பாட்டு அறிக்கையையும் செயலாளர் எம். எப். எம். பாஹிம் அவர்கள் முன்வைத்ததுடன்.
கடந்த கால கணக்கறிக்கையை பொருளாளர் அஷ்ஷேக் எம். எஸ். எம். ரிகாஸ் அவர்கள் முன்வைத்தார்கள்.

அத்துடன் எதிர்வரும் 2023 – 2027 வரையான நான்கு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. ஸலாமாவின் புதிய தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன்,
பொதுச் செயலாளராக எம்.எப்.எம். பாஹிம் அவர்களும் பொருளாளராக அஷ்ஷெய்க் எம். எஸ். எம். ரிகாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்குறிப்பிடப்பட்ட பதவிதாங்குனர்களுடன் நிர்வாக சபை அங்கத்தவர்களாக
கே. எம். எம். இம்தியாஸ், எம். ஏ. ரிபாய், அஷ்ஷெய்க் எம். எஸ். எம். யெஸ்மின்,
எம். எம். ஏ. எம். ஷரப், எம். ரஸீன் மொஹிதீன், ஏ. ஆர். எச். எச். சப்ரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வுகளில் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நன்றியுரை ஸலாமா சொசைட்டியின் முன்னாள் உப தலைவர் அஷ் ஷேக் எம். ஜீ. ரயீஸுல் இஸ்லாம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வுகளை இலங்கை வானொலி தயாரிப்பாளர் அஷ்ஷேக் சீ. எம். எம். ஸுபைர் நெறிப்படுத்தினார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...