காஸாவின் கான் யூனுஸ் பிரதேச நாசர் மருத்துவமனை முற்றிலுமாக செயலிழந்த நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அதனை ஆக்கிரமித்ததோடு மருத்துவமனை பணிப்பாளரை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது.
காசாவில் ஹமாஸ் இஸ்ரேலிடையே போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அப்போது நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறுவதற்கு தனி பாதை திறந்து வைத்தனர் ராணுவத்தினர்.
கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
(அல்ஜஸீரா)