பலஸ்தீனத்தை காக்க.. இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

Date:

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், பலஸ்தீனம்-எகிப்து ராஃபா எல்லையில் மக்கள் குவிவதை தடுக்க போர் நிறுத்தம் மட்டுமே தீர்வு என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

தவிர்க்க முடியாமல் போர்கள் இன்னமும் மனித சமூகத்தை பின்தொடர்ந்துதான் வந்துக்கொண்டிருக்கிறது. இப்படியாக நீண்ட காலமாக நடைபெற்று வரும் போர்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் முக்கியமானது.

இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடமிருந்து தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி பலஸ்தீனம் வந்தனர். அவர்களை பலஸ்தீன மக்கள் அன்போடு வரவேற்றனர்.

ஆனால் பிரிட்டனும், அமெரிக்காவும் யூதர்களை பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்குவதாக வாக்களித்தனர்.

இப்படி உருவானதுதான் இஸ்ரேல். தங்க நிலம் கொடுத்த நட்டையே இரண்டு துண்டாக உடைத்து அதில் இஸ்ரேலை யூதர்கள் உருவாக்கினார்கள்.

நாளடைவில் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைய தொடங்கியது. இதற்கு எதிராக பலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாக தொடங்கின. பலஸ்தீன விடுதலைக்கு இந்த அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுக்க, இவர்களை அடக்குகிறோம் என இஸ்ரேல் போரில் குதித்தது. இதன் விளைவாக அவ்வப்போது பலஸ்தீனம் மீது குண்டுகள் பாய்ந்தன.

எங்கு பார்த்தாலும் அழுகை குரலும், வெடி குண்டுகளால் சிதறுண்ட உடல்களும் பலஸ்தீனத்தில் மிகவும் இயல்பானதாக மாறியது. இதையெல்லாம் பார்த்த உலக நாடுகள் பஞ்சாயத்து பேசி, இஸ்ரேலுக்கு கடிவாளமிட்டது.

ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் , யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக இஸ்ரேல் மீது, பலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கி வைத்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் மிகப்பெரிய பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது.

கடந்த 150 நாட்களாக நடைபெற்று வரும் இந்த பதில் தாக்குதலில் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியெனில் நாளொன்றுக்கு சராசரியாக 180 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஐநா பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேல் இந்த போரிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.

இந்நிலையில், பலஸ்தீனம்-எகிப்து எல்லையான ராஃபாவில் காசா மக்கள் குவிவதை தவிர்க்க வேண்டும் எனில் போர் நிறுத்தம் மட்டுமே தீர்வு என்று ஐநா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், “காசா மக்கள் தொகையில் பாதி, அதாவது சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பக்கத்து நாடான எகிப்தின் ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர்.

குடிநீர், மின்சாரம் மற்றும் போதிய உணவுப் பொருட்கள் இல்லாமல் சுகாதாரமற்ற சூழ்நிலையில், நெரிசலான தற்காலிக தங்குமிடங்களில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

காசா மக்களுக்காக ராஃபா எல்லைகள் திறக்கப்படுமா? அவர்கள் எகிப்தில் அனுமதிக்கப்படுவார்களா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஐநா தலைவர், “எல்லை திறப்பதற்கு அழுத்தம் கொடுப்பதை விட போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதுதான் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும்” என்று கூறியுள்ளார். இன்றைய நிலவரப்படி மொத்தம் 27,947 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...