கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 02 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் குழுவொன்று விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், கண்டி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.