“புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்” AYFO சமூக சேவை அமைப்பின் சுதந்திர தின நிகழ்வும் மர நடுகையும்!

Date:

-ஏ. கே. ஹஷான் அஹமட்

இலங்கை 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை அஷ்ஹேரியன் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (4) சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வருகை தந்த அதிதிகளால் தேசிய கொடி ஏற்றபட்டதுடன் , ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக வருகை தந்திருந்த, முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரதி தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.மன்சூர் உரை ஆற்றியதோடு, கௌரவ அதிதி உரையினை கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஐ. ரனூஸ் நிகழ்த்தியதுடன், தொடர்ந்தும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம்  உரை யும் நிகழ்த்தினார்.

மேலும் நிகழ்வுக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சரீபா, தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கலாசாலையின் தலைவர் அஷ்-ஷேய்க் இஸ்மாலெப்பை, SLMC STR இளைஞர் காங்கிரஸின் தலைவரும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்யாலய ஆசிரியர் ஹாதிக் இப்ராஹிம், அமைப்பின் ஆலோசாகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...