Sunday, November 29, 2026

1983 ‘கறுப்பு ஜூலை’ கலவரம் குறித்து ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்!

1 min read · 36 reads
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ (Black July) துயரச் சம்பவங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (28) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
குழுவின் முக்கிய பணிகள்:
  • 1983 வன்முறைகளின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தல்.

  • தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல்.

  • இக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான யோசனைகளை சமர்ப்பித்தல்.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள இத்தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
  1. அமைச்சர் சரோஜா போல்ராஜ் (தலைவர்)

  2. அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

  3. பிரதி அமைச்சர் எரங்க குணசேகர

  4. பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

  5. பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

  6. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

  7. பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்

  8. பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி

  9. பாராளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க

  10. பாராளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார

  11. பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க

  12. பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க

1983 ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக வெடித்த வன்முறைச் சம்பவங்கள் ‘கறுப்பு ஜூலை’ என அழைக்கப்படுகின்றன. இதில் பெருமளவான உயிரிழப்புகளும், பாரிய சொத்து அழிவுகளும் ஏற்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இலங்கையின் பல தசாப்த கால யுத்தத்தின் முக்கிய திருப்புமுனையாக இச்சம்பவம் கருதப்படுகின்றது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.