புத்தளம் மன்ப உஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் தலைமையில் நேற்று (பெப்,04) நடைபெற்றது.
கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் (கபூரி ) கலந்து கொண்டார்.
கிராஅத்தை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்,
76 ஆவது சுதந்திர தினம் கொண்டாப்படுகின்ற நிலையில் சுதந்திர தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கவேண்டும் அதற்கான காரணங்களும் நியாயங்களும் என்ன என்பது பற்றிய ஒரு விளக்கத்தை பல்வேறு கோணங்களில் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையிலும் முஸ்லிம் என்ற வகையிலும் எமது தாய்நாட்டுக்கு நாங்கள் ஆற்றவேண்டிய முக்கியமான பணிகள் என்னவென்பதையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இறுதியில் முதல்வர் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் நன்றி உரையுடன் மறைந்த இஸ்லாஹிய்யா அதிபர் அஷ்ஷைக்,முனீர் உட்பட கல்லூரிக்காக பங்களிப்புச் செய்த பிரமுகர்களுக்காகவும் துஆ செய்வதுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.