பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டத்தில், இவ் வருடத்திற்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வின் தொடராக ( 10) சம்மாந்துறை மிரர்(Mirror) தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கான பிரதம அனுசரனையை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் பொது சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ ஜி.எம் இக்றாம் , அமைப்பின் அமைப்பாளர் எம் ஆர் ஆஷிக் அஹமட்,அமைப்பின் பொருளாளர் பிரோஸ் , அமைப்பின் உறுப்பினர்காளான ஏ.கே.ஹஷான் அஹமட், ஜே.றோசன் அக்தர் அவர்களும், மேலும் மிரர் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான சபீர், ரிப்கான் என பலரும் கலந்து சிறப்பித்தருந்தனர்.
நிகழ்வில் அமைப்பு சார்பாக அமைப்பின் பொருளாளர் இந்த திட்டதின் நோக்கம் தொடர்பாகவும், எதிர் காலத்தில் இந்த திட்டத்தினூடாக மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக எவ்வாறு உதவ உள்ளோம் என்பது தொடர்பாகவும் உரை நிகழ்த்தியிருந்தார்.
-ஏ. கே. ஹஷான் அஹமட்