பலஸ்தீனிய குழுவான ஹமாஸ் செவ்வாயன்று காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியதாகக் கூறியது.
அதில் பணயக்கைதிகளை விடுவிப்பதும் அடங்கும், மேலும் ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தாமதமாக ஹமாஸின் பதில் விபரங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளால் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தது.