மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ‘நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’

Date:

மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி நண்டை போல நடந்து கொண்டமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி, ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது  எம்.பிக்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அதன் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபை அனுமதியுடன் தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கமைய இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சம்பள அதிகரிப்பு தொடர்பான அண்மைய சர்ச்சைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பொது நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பரிந்துரைத்துள்ளார்.

மத்திய வங்கி தமது ஊழியர்களின் சம்பளத்தை 70 சதவீதம்அ திகரித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானதுடன், இந்த நடவடிக்கை ஆளும் கட்சிமற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...