இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குப்பி விளக்கு வெளிச்சத்தில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என கூறிய இலங்கை மின்சார சபையின் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
செய்தித் தொடர்பாளரைத் இடைநீக்கம் செய்து விசாரணையைத் தொடங்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.