முட்டை விலை அதிகரிப்பு!

Date:

முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

முட்டையை மொத்த விலையில் ரூ.60க்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை உயர்த்தியதாக முட்டை வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், குளிர்பதனக் கிடங்கில் முட்டைகளை சேமித்து வைத்த இடைத்தரகர்கள் குழுவொன்று முட்டையின் விலையை அதிகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...