வறண்ட காலநிலையால் கொழும்பில் நீர் பற்றாக்குறை

Date:

வறண்ட காலநிலை பல பகுதிகளில் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல்  பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

இதனால் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நீர் நுகர்வுக்காக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருவதே இதற்கு முதன்மையான காரணமாகும்.

வறண்ட காலநிலையால் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடி தண்ணீரை விநியோகப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சவாலை எதிர்கொள்ள, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக உட்செலுத்துதல் தடுப்பை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...