2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமது வீடுகளுக்கு கிடைத்துள்ள வாக்காளர் விண்ணப்ப படிவத்தில் 18 வயதை அடைந்தவர்கள் மற்றும் வீட்டில் தங்கியிருக்கும் சகல நபர்களின் தகவல்களையும் உள்ளடக்க வேண்டியது கட்டாயம் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்த வசிப்பிடத்தை மாற்றா, திருமணம்,கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக இருப்பிடத்தை மாற்றிய அனைவரது பெயர்களும் விண்ணப்பபடிவத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
மேலும் வெளிநாடுகளில் இருக்கும் வாக்களிக்க முடியாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியில் உள்ளடக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.