வாசிப்பைக் கூட்டினால் கிரகிக்கும் ஆற்றலுடன் நினைவாற்றலும் அதிகரிக்கும்: பிரதிக் கல்விப் பணிப்பாளர் தௌசீர்

Date:

மாணவர்களே நீங்கள் வாசிப்பு பழக்கத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள் அதன்மூலம் உங்கள் கிரகிக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும் என பிரதிக் கல்விப்பணிப்பாளர் தௌசீர் குறிப்பிட்டார்.
பஹன மீடியா நிறுவனத்தின் துணை நிறுவனமான பஹன அகடமி மள்வானை யடிஹேன மகா வித்தியாலயத்தில் நடத்திய தொடர்பாடல் வழிமுறைகளுள் ‘செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம்’ தொடர்பான செயலமர்வின் முடிவில் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்த களனி வலயக் கல்விப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். தௌசீர் (நளீமி) இவ்வாறு தெரிவித்தார்.
இச்செயலமர்வின் விரிவுரையாளர்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சம்சுதீன் அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத், ‘நியூஸ்நவ்’ இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் வருகைத்தந்திருந்தனர்.

அல்முஸ்தபா மகா வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் சம்ரிஹான் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் தொடர்ந்து உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் தௌசீர்,
இந்தப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கிரகிக்கும் ஆற்றல் குறைவாகக் காணப்படுகிறது. தற்போதைய அதிபர் அதனை வளர்க்கப் புதிய திட்டங்களை வகுத்து வருகின்றார்.

மேலும் பாடசாலை அல்லாத நேரங்களில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்குவிப்பதுடன் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

இன்றைய இந்தக்கருத்தரங்கின் மூலம் மாணவர்களின் தொடர்பாடல் திறனை வளர்க்கவும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தொடர்பாகவும் அறிவூட்டப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எந்தவொரு நவீன தொழில்நுட்பத்திலும் நன்மை இருப்பதைப்போலவே சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே நீங்கள் நல்ல விடயங்களுக்காக மட்டுமே இவற்றைப் பயன்படுத்தவேண்டும். நீங்கள் உங்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்ற சிந்தனையுடன் வாழும்போது தவறான வழியில் செல்லாது உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உலகம் மிக வேகமாக மாறிவருகிறது இன்று நடப்பவை நாளை மாறிவிடக் கூடும் எதுவுமே நிச்சயமில்லாத நிலையாகும். தேர்தலில் 60-65 வீதம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிழந்து பாராளுமன்றத்தில் எந்த ஒரு ஆசனமும் பெறாத ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி நடாத்தி வருகின்றார்.
உலகில் எந்தவொன்றும் நிச்சயமானது அல்ல காலையில் நன்றாகவுள்ள நிலைமை மாலையில் மாறிவிடக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.

இங்கு உரை நிகழ்த்திய ‘நியூஸ்நவ்’ இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத்,

எமது பஹன மீடியா அகடமி செயற்கை நுண்ணறிவு தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டுவது போலவே கைபேசித் தொழில்நுட்பம் (MOJO) உரை நிகழ்த்தும் கலை, ஒளிபரப்புத் துறை நெறிப்படுத்தல் உலமா ஜெர்னலிஸம் முதலான பல்வேறு பாடத்திட்டங்களை நடத்துவதுடன் ‘நியூஸ்நவ்’ என்னும் இணையத்தளம் மூலம் சமூக ஊடகவியல் துறையில் மும்மொழியிலும் பங்காற்றி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...