ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்தது இஸ்ரேல்!

Date:

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து முயற்சித்து வருகின்றன.

இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை முன்மொழிந்தனர்.

முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1500 பலஸ்தீன  கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

2-வது கட்டத்தில் ஆண் பணயக் கைதிகளும், 3-ம் கட்டத்தில் உயிரிழந்த  பணயக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தது. அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை. அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும்.   நாங்கள்  வெற்றி பாதையில் இருக்கிறோம்.

காசாவின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடமாட்டோம். காசாவின் நீண்ட காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் இஸ்ரேலுக்கு  மட்டுமே உள்ளது என்றார்.

ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...