50 வீதமான பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை!

Date:

50 வீதமான பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை உள்ளது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவரிடையேயான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கி 5 ஆயிரத்து 133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமையவே இந்தக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்னு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 10 ஆயிரத்து 221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலேயே 4ஆயிரத்து 983 பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 517 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 85 கிராம் ஹெரோயின், 48 கிராம் ஐஸ், ஆயிரத்து 561 போதை மாத்திரைகள், ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா, 3 கிலோ மாவா, 2 கிலோவுக்கும் அதிகமான மதன மோதக மாத்திரைகள், ஆயிரத்து 285 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை குறைவடைந்துள்ளது.

எனினும், 107 பாடசாலைகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் காவல்துறையினர்
தெரிவித்தனர்.

மேலும், போதைப்பொருள் பாவனையுள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் 5 ஆயிரத்து 133 குழுக்கள் பதில் காவல்துறைமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...