அரச வணிக பலநோக்கு கூட்டத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு ஓரிரு தினங்களுக்குள் அனைத்து ச.தொ.ச நிறுவனங்களுக்கும் முட்டை விநியோகிக்கப்படும் என அரச வணிக பல நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள 70 இலட்சம் முட்டைகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதுடன் அந்த முட்டைகள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச வணிக பலநோக்குக் கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் தொகை முட்டையை இறக்குமதி செய்துள்ளது.
அந்த வகையில் 70 இலட்சம் முட்டைகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.