
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்,உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா ருசைக், அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹமட் அஸ்மீர், சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ்,சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம்,மௌலவி எம்.ஆர். அப்துர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் நூல் ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.