75 மில்லியன் டொலர் செலவில் சவூதி நிறுவிய கால்-கை வலிப்பு மருத்துவமனை செயற்பாடுகளை மதிப்பீடு செய்ய வந்தது SFD

Date:

இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள்  நேற்று(27) அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) அபிவிருத்தி மதிப்பீட்டுப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவை தூதரகத்தில் வரவேற்றார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கால்-கை வலிப்பு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்கள் திட்டத்தின் செயற்படுத்தலுக்குப் பின்னரான மதிப்பீட்டை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு, வளர்ச்சிக்கான சவூதி நிதியம் 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கி உதவியது.

இத்திட்டம் டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டில் இல் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இம்மருத்துவமனையானது 242 படுக்கைகள் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் அமையப்பெற்றுள்ளது.

இது கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மூளையின் மின் ஆற்றலின் அதிகரிப்பால் ஏற்படும் வலிப்புக்கு சிகிச்சையளிப்பதற்கான சேவைகளை வழங்குகி வருகிறது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...