இலங்கையின் LGBTIQ+ சமூகப் பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இந்த வாரம் சந்தித்து உரையாடியுள்ளது .
பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. டோலவத்தவினால் கொண்டுவரப்பட்ட LGBTQ+ உரிமைகளை அங்கீகரிப்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் குறித்து கவனம் செலுத்துமாறு சபாநாயகரை வலியுறுத்துவதே இச்சந்திப்பின் நோக்கமாகும் என பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.