அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையில் மாற்றம்!

Date:

சில அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.

விற்பனையாளர்கள் பொருட்களில் அதிக இலாபம் ஈட்டுவதை தடுத்து, நுகர்வோருக்கு சாதகதன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி உருளைக்கிழங்கு, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 870 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 265 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் இறக்குமதி பெரிய வெங்காயம் 320 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாவுக்கும்,
ஒரு கிலோகிராம் பருப்பு 295 ரூபாவாகவும் அதிகபட்ச மொத்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...