‘அழிவுக்கு மத்தியில் கொண்டாடுவோம்’: காசா முகாமில் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி

Date:

காசாவில் இன்னல்களுக்கு மத்தியிலும், இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கூடாரங்களில், அவ்வப்போது  சில மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை (16) அப்படி நிகழ்ந்த ஒரு திருமணத்தையே இங்கு காண்கிறீர்கள்.
மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் எல்-பலாவில் இடம்பெயர்ந்தவர்களுக்கான தற்காலிக முகாமின் நடுவில்,  வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒரு பலஸ்தீனிய ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.

மஹ்மூத்  (23) மற்றும் ஷைமா காசிக்,(18) எட்டு மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர், ஆனால் கடந்த அக்டோபரில் தொடங்கிய காசா மீதான இஸ்ரேலியப் போரின் காரணமாக திருமணத்தை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் தங்கள் இதயங்களிலும், இடம்பெயர்ந்த அயலவர்கள் மற்றும் நண்பர்களின் இதயங்களிலும் மகிழ்ச்சியின் சாயலைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் இந்த திருமண விழாவை நடத்தினர்.

இதேவேளை ‘நாங்கள் சாதாரண சூழ்நிலையில் பிரம்மாண்டமாக அழகான உடைகளில் திருமணத்தை எடுக்க கனவு கண்டோம், ஆனால் போரின் அழிவுகள் எங்களிடமிருந்து அனைத்தையும் எடுத்தன,”எங்கள் வீடுஇ உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்றும் திருமன ஜோடிகள் கருத்து தெரிவித்தனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...