மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்த மாதம் கனடாவுக்குச் சென்று அங்கு வாழும் இலங்கையர்களிடம் உரையாடவும், சில கனேடிய அரசியல்வாதிகளைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர் மார்ச் 23 ஆம் திகதி டொராண்டோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். முன்னதாக, அவர் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குச் சென்றார்.