சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு பி.ப 2மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துகொள்வார்.