இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா அவர்களின் தலைமையில் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டு, மதத் தலைவர்களின் ஆசீர்வாதங்கள் இடம்பெற்றன.
தொடர்ந்தும் இலங்கைக்கான சுதந்திர தின செய்திகளும் வாசிக்கப்பட்டன.
Celebrations of 76th National Day of Sri Lanka in commenced in KSA with Flag Hoisting event at the embassy premises by Ambassador Amza. Event included the blessings by religious leaders, reading national day messages and singing national anthem in Sinhala and Tamil by students of… pic.twitter.com/MF1dMpdWam
— Embassy of Sri Lanka in Saudi Arabia (@SLinRiyadh) February 4, 2024
இந்நிகழ்வில் பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் செய்த் சாலிஹ் ரிபாய் மௌலானா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.