தேசிய சுதந்திர தின நிகழ்வுக்காக நேற்று நடைபெற்ற ஒத்திகையின் போது ஏற்படட கருத்து முரண்பாடான சம்பவம் காரணமாக அதில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்புடைய அனைவரும் பயிற்சிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
சம்பிரதாயபூர்வமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தரும் ஜனாதிபதியின் வாகனத்தின் இருப்புறங்களிலும் செல்ல பொலிஸ் குதிரைப்படையை நீக்கிவிட்டு, இராணுவ மோட்டார் சைக்கிள் படைப்பிரிவை சேர்த்தமையால் ஏற்பட்ட சிக்கலான சூழல் காரணமாக இந்த நிலைமையேற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாட்டு குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கத்திற்கு பின்னர் பொலிஸ் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் மீண்டும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.