தாய்நாட்டின் ஆள்புலத்துக்கு அரணாகச் செயற்படுவது அவசியம்: முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்

Date:

நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவுகூர வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து நம் நாடு மீண்டு இன்றுடன் 76 வருடங்களாகின்றன. பிரித்தானியாவின் ராஜதந்திரங்களால் நமது நாட்டு வளங்கள் மலிமாக மட்டுமன்றி சுயநலத்துக்காகவும் பாவிக்கப்பட்டது.

நாம் பெற்ற சுதந்திரம் அந்நிய கலாசாரங்களின் திணிப்பிலிருந்தும் நம்மை பாதுகாத்தது.

இன்று சகல சமூகத்தினரும் தங்களது அடையாளங்களுடன் வாழக் கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. எமது நாட்டின் எதிர்காலம் சுதந்திரத் தின யதார்த்தங்களை புரிந்து வாழ்வதில் தானுள்ளது.

இலங்கையில் வாழும் நாம்,ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து 76 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சுதந்திரத்தை பெறுமதியானதாக்குவோம்.

பிரிந்து அல்லது பிளவுபட்டு நமது தாய் நாட்டின் ஆள்புலமைக்கு ஆபத்து ஏற்படாது பாதுகாக்க இந்த நாளில் உறுதிபூணுவோம்.

நாடு பெற்ற சுதந்திரம் நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில்,பணிகளை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...