எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துவது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் சட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கலந்துரையாடலின் போது ஆராயப்படும் என தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.