நம்பிக்கையில்லாப் பிரேரணை: ‘எவருக்கும் பயந்து ஓட மாட்டேன்’: மஹிந்த யாப்பா

Date:

”நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அந்தப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது அது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சரியாக அமுல்படுத்தாமை, அரசமைப்பு, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறியமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் உத்தர லங்கா சபை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை, அரசமைப்பை மீறவில்லை, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறவில்லை.

அதனால் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சி என் பதவியை இராஜினாமா செய்யமாட்டேன். எவருக்கும் பயந்து ஓடவும் மாட்டேன்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...