நாளை 3 ஆம் தவணைக்கான 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

Date:

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சமூக வலைதளங்களில் உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சை வினாத்தாள் கசிந்ததையடுத்து வினாத்தாளை இரத்து செய்த பரீட்சைகள் திணைக்களம், மீண்டும் குறித்த பாடத்திற்கான பரீட்சையை கடந்த முதலாம் திகதி நடத்தியது.

எனவே, பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாக இருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...