நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் எடுத்துரைக்கும் வகையிலான கண்காட்சியொன்றினை நாஸ் கலாச்சார நிலையமும் தாருல் குர்ஆன் லி பராஇமுல் ஈமானும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் நபியவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை, நபியவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்னரான வாழ்க்கை, மக்காக் காலம், மதீனாக்காலம், நபியவர்களின் குடும்ப வாழ்வும் முகாமைத்துவமும், நபியவர்களின் ஆளுமைமிக்க வாழ்வியல் கலைகளும் தத்துவங்களும் எனும் தலைப்புக்களில் கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை (மார்ச் 01) பி.ப.2.30 க்கு அதிதிகளின் பிரசன்னத்துடன் உத்தியோகபூர்வமாக வெல்லம்பிட்டி நாஸ் கலாச்சார நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தக் கண்காட்சி பொது மக்கள் பார்வைக்காக 2,3,4 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குர்ஆன் மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முஸ்லிமல்லாத பல சகோதரர்களும் இந்தக் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளனர்.