ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில்,
புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், புற்றுநோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் புற்றுநோய்க்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும் முழுமையாக குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.
கடந்த வருடம் அமெரிக்காவில் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது.
சோதனையில் கலந்து கொண்ட எல்லா புற்றுநோய் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.