பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்

Date:

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

​பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நேற்று(06) இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் திஸர குணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் பரந்த கூட்டணியுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25 வீத பிரதிநிதித்துவமும் செயற்குழுவில் 50 வீத அதிகாரமும் கிடைக்கும்

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய உறுப்பினர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கட்சியின் பொதுச் செயலாளராக புதிய உறுப்பினரொருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...