முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அனுசரணையுடன் கொழும்பு முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மிஃஹ்ராஜ் இரவு நிகழ்ச்சி நேற்றைய தினம் (7) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளர் பைசல் ஆப்தீன், திணைக்களத்தின் தகவல் அதிகாரி எம்.எஸ். ஆலா அஹமட், முஸ்லிம் சேவைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எம். இசட். அஹமட் முனவ்வர், ஜம் இய்யதுல் உலமா சபையின் செயற்குழு உறுப்பினர் தாசிம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.