புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கல்லூரியின் வளாகத்தில் அதிபர் . ஐ.ஏ. நஜீம் அவர்களின் தலைமையில் நினைவு நிகழ்வுகள் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு புத்தளம் கல்வி பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், அவர்கள் பிரதம அதிதியாகவும் புத்தளம் அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளரும், புத்தளம் ஆன்மீக ஒருமைப்பாட்டு மைய்யத்தின் பணிப்பாளரும் ஆகிய அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றினார்கள்.
கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்கள், ஸாஹிரா கல்லூரியின் அபிவிருத்திச் சங்க செயலாளர், உறுப்பினர்கள், ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.