ஹிஜ்ரி 1445 “ஷஃபான்” மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு இன்று!

Date:

ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 புனித ரஜப் 29ஆம் நாளாகிய இன்று சனிக்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இம்மாநாடு இன்ஷா அல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுத் தலைவர் அல் கலீபத் அல் ஷாதுலீ மௌலவி எம்.பி.எம். ஹிஷாம் (அல் பத்தாஹி) அவர்களின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறை குழு மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சகல தரப்பினரதும் இறுதித் தீர்மானம் இன்ஷா அல்லாஹ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக உத்தியோகபூர்வமாக மாநாட்டு தலைவரினால் அறிவிக்கப்படும்.

தலைபிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்கள் தயவுடன் வேண்டப்படுகின்றனர்.

பிறை சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு 011 2432110, 011 2451245, 0777 353 789 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்புகொள்ளலாம்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...