இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த தந்தை: அம்பாறையில் சம்பவம்

Date:

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலைசெய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது 29 வயதான மகன் மற்றும் 15 வயதான மகள் ஆகியோரையே தந்தை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பிள்ளைகளின் கழுத்தை வெட்டி இருவரையும் தந்தை கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, 60 வயதான தந்தை, தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த நிலையில், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என தெரிய வருகின்றது.

பிள்ளைகளின் தாய் அண்மையில் உயிரிழந்த நிலையிலேயே, இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...