‘ஐயோ சாமி’ பாடலை பாடிய இலங்கை பாடகிக்கு எடிசன் விருது!

Date:

ஐயோ சாமி” என்ற  பாடலை பாடி இலங்கை பாடகி வின்டி குணதிலகவுக்கு சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை வந்தடைந்தார்.

சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது.

பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

அங்கு, ‘ஐயோ சாமி’ பாடலைப் பாடிய வின்டி குணதிலகவுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சிறந்த உணர்ச்சிப் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

அவரை வரவேற்க ஏராளமான மக்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

“சர்வதேச விருதை நான் பெறுவது இதுவே முதல் முறை. இலங்கைக்கு வழங்கப்படுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வின்டி குணதிலக்க நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...