காசா மக்களுக்கு மனிதாபிமான நிதி உதவி வழங்கிய கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

Date:

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மனிதாபிமான நிதியை வழங்கியது.

அதற்கமைய நேற்றையதினம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைமைக்குழு பள்ளிவாசல் வளாகத்தில் ‘இப்தார்’ விழாவை நடத்தியது.
இதன்போது பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசீன் வாழ்த்துரை வழங்கியதோடு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் காஸா மக்களுக்கு பள்ளிவாசல் சார்பாக  நன்கொடைகளை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வழங்கினார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சர்வமதக் கூட்டணியின் தலைவர் அல் ஹாஃபில் அஷ்ஷெய்க் கலா நிதிஹசன் மௌலானா இந்த விழாவில் சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்,முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைசல், பலஸ்தீனத்தின் முன்னாள் தூதர் ஃபவ்ஸான் அன்வர், ஹஜ் கமிட்டி தலைவர் இப்ராஹிம் அன்சார், அஜ்வதுல் ஃபஸியா அரபிக் கல்லூரி முதல்வர் மற்றும்  பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...