ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறை தண்டனை:கொழும்பு மேல் நீதிமன்றம்

Date:

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள எச்.சி 1948/20 எனும் வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இனங்களுக்குடையில் நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கில் சாட்சி விசாரணைகளை 2022 செப்டெம்பர் 20 திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...