தற்போதைய நாடாளுமன்றுக்கு மக்கள் ஆணை இல்லை : மஹிந்த தேசப்பிரிய!

Date:

ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும். நாட்டில் தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்கின்றது.

இடைக்கால ஜனாதிபதி ஒருவருக்கு ஒரு வருடம் மாத்திரம் வழங்கப்பட்டால் போதுமானது. தற்போது இந்த காலஎல்லை கடந்துள்ளது. தற்போதைய நாடாளுமன்றுக்கும் மக்கள் ஆணை இல்லை. எனவே புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியன புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த வருட இறுதிக்குள் இவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை அடுத்தவருடம் நடத்தமுடியும்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...