நிந்தவூர் ” SHOTOKAN KARATE & MARTIAL ARTS SHOOL ” கராத்தே பாடசாலையின் கராத்தே தரப்படுத்தல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

Date:

நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் கராத்தே தரப்படுத்தல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு திங்களன்று (18) அம்பாறை மாவட்ட SKMAS கராத்தே பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் MT. அஹமட் நிம்ஷி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கல்முனை இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தின் அதிகாரி மேஜர் ரூவன் மற்றும் SKMAS பாடசாலையின் தலைவரும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியருமான சிஹான் MS. வஹாப்தீன் மற்றும் கல்முனை பிராந்தியத்தின் விளையாட்டு ஊக்குவிப்பாளரும் சமூக சேவையாளரும் கல்முனை BESTOR நிறுவனத்தின் உரிமையாளருமான AM. றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கௌரவ விருந்தினர்களாக அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் MIM. அஹமட் ஹுஸைன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் USKU பிரதிநிதியும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாருமான N. ஸதாம் மற்றும் சுஹாரி கராத்தே சங்கத்தின் கராத்தே ஒருங்கிணைப்பாளர் ACM. பிர்னாஸ் ஆசிரியர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் .

இந்நிகழ்விற்கு SKMS பாடசாலையின் நிந்தவூர் பிராந்தியம் மற்றும் பொத்துவில் பிராந்தியங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தரப்படுத்தல் நிகழ்வில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடந்த காலங்களில் கராத்தே போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு அதிதிகளினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

மேலும் USKU பணிப்பாளரும் எமது SKMAS பாடசாலையின் தொழில்நுட்ப ஆலோசகருமான சிஹான் ZA. ரவூப் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SLM. நுஸ்ரான்

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...