‘மொட்டு ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது’

Date:

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து  இன்று இலங்கைக்கு வந்தடைந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தவே இலங்கை வந்துள்ளேன். எமது பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாது. கடந்த காலத் தேர்தல்களை போன்றே எதிர்வரும் தேர்தல்களிலும் எமது கட்சி பாரிய மக்கள் ஆதரவைப் பெறும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...