‘அன்று இன, மத, வித்தியாசம் தெரியவில்லை; இன்று நாம் எங்கு இருக்கின்றோம்? :இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘மகே கதாவ’ நூல் வெளியீடு !{படங்கள்}

Date:

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘மகே கதாவ’ (எனது கதை) என்ற வாழ்க்கைச் சரிதை நூல் கடந்த செவ்வாய்க்கிழமை (05) மாலை 03.45 மணிக்கு கொழும்பு 10இல் அமைந்துள்ள ஆனந்த கல்லூரியின் குலரத்ன கேட்போர் கூடத்தில்  வெளியிடப்பட்டது.
பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் முன்னிலையில் நூலின் முதல் பிரதியை நூல் வெளியீட்டுப் பதிப்பகத்தின் சார்பில் ஹேர்ஸ் பெர்ணாந்து நூலாசிரியர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர்களில் ஒருவரான பாதில் பாக்கீர் மாக்கார் நிகழ்த்தினார்.
நூல் தொடர்பான கருத்துரைகள் வல்பொல ராகுல பௌத்த கல்வி நிறுவகத்தின் பணிப்பாளரும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கல்கந்தே தம்மானந்த தேரர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரும்  பிரபல ஊடகவியலாளருமான ஏரானந்த ஹெட்டியாராச்சி மற்றும் பிரபல ஊடகவியலாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரையினை நூலாசிரியர் ஆற்றினார். சிங்களத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட  இந்நூல்  மிக விரைவில் தமிழ் மொழியில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட உள்ளது.
வாழ்க்கையோட்டத்தில் நாம்  பெற்றுக்  கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்  முகமாக 19 அத்தியாயங்கள் தமது சிறு வயதில்  பாடசாலை கல்வி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் விடுதி வாழ்க்கை விடுதி மாணவத் தலைவர் , பல்கலைக்கழக கல்வி, சட்டக் கல்லூரி கல்வி ,மாணவ கால போராட்டம், ஜந்து  தசாப்த கால கொள்கை ரீதியான  அரசியல் பயணம்  மற்றும்  தனிப்பட்ட  வாழ்க்கை  அடங்களான  இந்த சுயசரிதை நூல் தாம் கற்ற  ஆனந்தாக் கல்லுாாியில்  வெளியிட்டு வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
இங்கு உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்  –  அன்று சிங்கப்பூர் போன்ற நாடு நமது நாட்டின் ஓர் உதாரணமாகக் கொண்டு அந்த நாட்டில் வாழும் சகல இன மத சமூகங்கள் ஒன்றினைந்து முன்னேறியுள்ளன. நாம் தற்பொழுது எங்கு உள்ளோம்.
நமது நாடு எந்த நிலையில் உள்ளது. இந்த ஆனாந்தாக் கல்லுாாாிதான் எனது வாழக்கையில் ஒர் முன்னேற்றம். அன்று இன, மத, வித்தியாசம் தெரியவில்லை நாம் எல்லோரும் ஒர் தாய் மக்கள் போன்று இந்தக் கல்லூரியில் கற்றோம்.

அன்று குலரத்ன அதிபர் அவர்கள் டீ.பி. ஜாயாவை கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபராக பாரம் எடுக்க  சொன்னார் அதன் பிறகு நாடு முழுவதும் சாஹிரா கல்லூரியில் உருவாகின,ஆனாந்தா நாளந்தா, அதே போன்று ஹிந்துக் கல்லூரிகள் உருவாகின.
எம்மில் அந்த அளவுக்கு சிறுபான்மை பெரும்பான்மை வித்தியாசம் இருக்கவில்லை.  இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக ஏனைய சிறுபான்மைத் தலைவர்கள் 50 க்கு 50 கேட்டவுடன் டி.பி ஜாயா அவர்கள்  எமது உரிமைப்பிரச்சினை பேசிப் பெற்றுக் கொள்வோம் முதலில் நாம்  அனைவரும் சேர்ந்து இலங்கையர் என்ற ரீதியில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வோம் என டி. பி. ஜாயா பேசினார்.

அவர் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராகவும் , டி.பி.ஜயதிலக்க இந்தியாவின் உயர் ஸ்தானிகராகவும் பதவி வகித்தார்கள். பாகிஸ்தான் டி.பி.ஜாயவுக்கு பிரஜா உரிமை வழங்க முற்பட்டபோது டி.பி. ஜாயா அவர்கள் எனது தாய்நாடு இலங்கை அந்த பிராஜாவாகவே நான் வாழ்வேன் என இலங்கை மீள வந்திருந்தார் என்பது வரலாறு என்றும்  பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் கூறினார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...