ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று: இலங்கையர்களால் காண முடியாது!

Date:

இவ்வாண்டுக்கான முதல் சந்திரகிரகணத்தை காணும் வாய்ப்பு இன்று (25) ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திர கிரகணம் தென்படும்.

எவ்வாறாயினும், பிற்பகல் சந்திரகிரகணம் ஏற்படுவதால் இலங்கையர்களால் அதனை காண முடியாது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பது மட்டுமல்லாமல் பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வருவதால் இந்த சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 04.39 மணி வரை சந்திர கிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்கா, ஜப்பான், அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், தெற்கு நார்வே, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரணத்தை காண முடியும்.

 

Popular

More like this
Related

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...

கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய...

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...